சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் பல்வேறு உதவிகளும், ஆன்மீக சொற்பொழிவும்…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடைபெறும் நிகழ்வு  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் திரு சிவாநாதன் தலமையில் 04/10/2024 அன்று  சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் முருக வழிபாடு என்ற தலைப்பில் ஆன்மீக அருளுரையினை
ஓய்வு  பெற்ற வவுனியா தேசிய கல்லியியல் கல்லூரி விரிவுரையாளர்  திருமதி விஜயகுமாரி முருகேசம்பிள்ளை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து  உதவித் திட்டங்களாக, யா/ அச்செழு சைவப்பிரகாச  வித் தியாலய கோரிக்கைக்கு அமைவாக,
நவராத்திரி விழா  போட்டிகளிக்கான பரிசில்கள் வழங்குவதற்கான நிதியாக ரூபா  20,000 வழங்கிவைக்கப்பட்டதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை பகுதியினரின் கோரிக்கைக்கு அமைவாக, கலாசார ஆய்வுக்கான நிநியாக 50,000 ரூபாவும் வழங்கப்பட்டன.
இதேவேளை கேப்பாப்பிலவு, வற்றாப்பளையை சேர்ந்த,
வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் கல்வி கறகும் மாணவி,  04 ம் வட்டாரம், முள்ளியவளையை சேர்ந்த, முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கறகும் மாணவன்,
அச்சுவேலியை சேர்ந்த,
அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருத்திக்கும்,  முன்னாள் போராளிகள் ஒருவருக்குமாக நான்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர், தொண்டர்கள் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள் அடியவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews