யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதியோர் தின நிகழ்வுகள் நேற்று காலை 9:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் அதன் முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்
ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக அரச அதிபர் திரு. ஶ்ரீநிவாசன் தலமையில் இடம் பெற்றது.
ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக அரச அதிபர் திரு.சிறினிவாஸ் ஆவர்களின் தலமை உரையினை தொடர்ந்து , வடலியடைப்பு இந்து இளைஞர் மன்ற அற நெறிப் பாடசாலை மாணவர்களின்,
வரவேற்பு நடனம், வில்லிசை ஆகிய கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதை தொடர்ந்து ஓய்வு பெற்ற விரிவுரையாளர்
அ.குமாரவேல், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்
திருமதி. சிவனொளிபாதம், யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்ற உதவி பணிப்பாளர் திருமதி வினோதினி ஆகியோரது கருத்துரைகளும் இடம் பெற்றன.
தொடர்ந்து தொண்டைமானாறு பகுதியில் உள்ள 70 ஆண், பெண் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவுக்கப்பட்டனர்.
இதேவேளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட தர்மக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ரூபா 180000/- பெறுமதியான இரண்டு கணனி தொகுதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மருத்துவர் செந்தில்குமரன், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், அறநெறி பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.