
*_꧁. புரட்டாசி: 𝟮𝟵
꧂_*
*_ செவ்வாய் -கிழமை_
*
*_ 𝟭𝟱• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்னல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : மாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மதிப்பு மேம்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.
கிருத்திகை : ஒற்றுமை உண்டாகும்.
ரோகிணி : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உறவினர்களின் வழியில் பொறுமை வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முடிவெடுப்பதில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். முன்கோபத்தினை குறைத்துக் கொள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். வியாபாரப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.
ஆயில்யம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
உயர் பொறுப்பில் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறப்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
மகம் : அனுபவம் பிறக்கும்.
பூரம் : புரிதல் ஏற்படும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
வெளியூர் பயணம் சாதகமாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். அலுவலகப் பணிகளில் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
உத்திரம் : புரிதல் ஏற்படும்.
அஸ்தம் : தாமதங்கள் குறையும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாலின மக்கள் விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். அறிமுகம் இல்லாத எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத வகையில் தனவரவுகள் கிடைக்கும். மனை தொடர்பான வில்லங்கம் விலகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சிறுதூர பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
மூலம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : கருத்துவேறுபாடுகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பண விஷயத்தில் சிக்கனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை சார்ந்த எண்ணம் மேம்படும். வாக்கு சாமர்த்தியங்களால் நினைத்ததை முடிப்பீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : சிக்கனம் வேண்டும்.
அவிட்டம் : நினைத்ததை முடிப்பீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
சதயம் : நெருக்கடிகள் உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
உடலில் இருந்துவந்த சில வலிகளுக்கு தீர்வு கிடைக்கும். அனுபவம் மூலம் சில மாற்றமான முடிவுகள் கிடைக்கும். ரகசியமான செயல்பாடுகளால் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் விருத்தி உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
பூரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
*┈┉┅━•• ••━┅┉┈*