இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஐப்பசி 3, ஞாயிற்றுக்கிழமை, ஒக்ரோபர் 20/2024.

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟬𝟯 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟬• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆதரவான பணிகளை செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரப் பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
⭐️பரணி : நெருக்கடிகள் குறையும்.
⭐️கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
கேளிக்கைகள் செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய இலக்குகளால் அலைச்சல் ஏற்படும். வாகனம் மற்றும் மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சோர்வு மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐️திருவாதிரை : லாபம் அதிகரிக்கும்.
⭐️புனர்பூசம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். பணியில் பொறுப்புகள் படிப்படியாக குறையும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பூசம் : பொறுப்புகள் குறையும்.
⭐️ஆயில்யம் : கற்பனைத்திறன் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
வியாபாரத்தில் பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கால்நடைகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மூட்டு மற்றும் முதுகு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தடைகள் அகலும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மகம் : மேன்மையான நாள்.
⭐️பூரம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளை பற்றிய புரிதல் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். வர்த்தக துறைகளில் நிபுணர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் பதற்றமின்றி செயல்படவும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மற்றும் பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பொதுமக்கள் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️சித்திரை : நெருக்கடியான நாள்.
⭐️சுவாதி : கவனம் வேண்டும்.
⭐️விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
ஆரோக்கிய பிரச்சனைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய தெளிவும் ஏற்படும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.
⭐️அனுஷம் : தெளிவு ஏற்படும்.
⭐️கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
⭐️பூராடம் : தீர்வு கிடைக்கும்.
⭐️உத்திராடம் : இழுபறியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வழக்கு பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.
⭐️திருவோணம் : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️அவிட்டம் : தாமதங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். பணி நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️அவிட்டம் : மரியாதை அதிகரிக்கும்.
⭐️சதயம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்துச் செல்வது நல்லது. மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. யோகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : எதிர்ப்புகள் விலகும்.
⭐️ரேவதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews