யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை பயிலக தொடக்கவிழா நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை முகாமைத்துவ உதவியாளர் திருமதி சாந்தி ஜெயரூபன் தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டன.
மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விரைந்தினரும், யாழ்ப்பாணம் ஓய்வு பெற்ற வலய கல்வி பணிப்பாளருமான முருகேசு இராசநாயகம், நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான வடமராட்சி வலய உடற் கல்வி பணிப்பாளர் கி.பாக்கியநாதன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் கி.முகுந்தன், பருத்தித்துறை சமூக சேவை உத்தியோகஸ்தர் ப.சர்மிலன், சிறி சோமஸ்கந்தா ஆரம்ப பாடசாலை பிரதி அதிபர் திருமதி ஜெயகலா தேவகுமார், அல்வாய் வடக்கு j/400 கிராம செயலர் சி.அரவிந்தராம், யா. வட இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் ப.மிதுலா உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
அதனை தொடர்ந்து இறைவணக்கம் இடம் பெற்றது. ஆசி உரையினை கவிஞர் திருத்துவ ராசா நிகழ்த்தினர்.
தொடர்ந்து எழுகை பயிலகத்தை நிகழ்வின் பிரதம விருந்தினரும் ஓய்வு பெற்ற யாழ்ப்பாணம் வலய கல்வி பணிப்பாளர் முருகேசு இராசநாயகம் நாடாவை வெட்டி பயிலகத்தை திறந்துவைத்தார்.
அதனை தொடர்ந்து வரவேற்பு உரை, தலமை உரை என்பன இடம் பெற்றன
இதேவேளை அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் கல்விச் சாதனையாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.