கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் 30/10/2024புதன்கிழமை சடலமாக கணவன் மனைவி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைரமுத்து யோகச்சந்திரன்,
மணிவண்ணன் தர்சன், ஜெகநாதன் மதுசன் ஆகிய மூவருமே நேற்று இரவு 10:30 மணியளவில் பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவரை நேற்று முன்தினம் இரவும், ஒரு சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை வாக்குமூலம் பெறுவதற்க்காக பருத்தித்துறை பொலீஸ் நிலையம் அழைக்கப்பட்டு அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்களின் கைதுகள் இடம் பெற்றிருக்கிறது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025 ம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை பெற்றதனாலேயே குறித்த இரட்டை கொலை இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைதி செய்யப்பட்ட சந்தேக நபரில் மணிவண்ணன் தட்சன் 28/10/2018 அன்று குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் கிராமத்தில் வீடு புகுந்து மேற்கொண்டு தாக்குதலில் கணவன் மனைவி இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் ஜெயசிறி அவரது மனைவி நீர்மமானது தேவி ஆகியோர் ஆவர், இதேவேளை மணிவண்ணன் தர்சன் தனது மனைவியின் தாயரையும் மூர்க்கத்தனமாக அதேநாளில் தாக்கியுள்ளார். அவரும் இன்று வரை இயலாமையாகவே உள்ளார்.
குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்க்காக பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலமையிலான விசேட பிரிவுகளும் , மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி போலீஸ் பரிசோதகர் சேந்தன் தலமையிலான அணிகளும் தீவிரமாக செயற்பட்டமை குறிப்பிட தக்கது.