பொன்னாலையில் மக்கள் எழுச்சி- தமிழர் சமஉரிமை இயக்கத்தின் இறுதி பரப்புரை ஆரம்பம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழர் சம உரிமை இயக்கத்தின் இறுதி பரப்புரை இன்று காலை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் ஆரம்பமானது.

வட்டுக்கோடடை தொகுதி வேட்பாளர் ந.பொன்ராசா, காங்கேசன்துறை தொகுதி வேட்பாளர் ஜெ.டிபினியா ஆகியோரின் தலைமையில் ஆரம்பமான இப்பரப்புரையில் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களும் தொண்டர்களும் பங்கேற்றிருந்தனர்.

வீடு வீடாகச் சென்ற இவர்கள் தாம் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளித்தனர்.

இயக்கத்தின் எதிர்கால திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனமும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

பொன்னாலை மக்கள் தமிழர் சம உரிமை இயக்கத்தின் வேட்பாளர் பொன்ராசாவிற்கு தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews