
*_꧁. கார்த்திகை: 𝟬𝟵
꧂_*
*_ சனிக்கிழமை_
*
*_ 𝟮𝟯•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அஸ்வினி : மாற்றங்கள் உருவாகும்.
பரணி : புதுமைகள் பிறக்கும்.
கிருத்திகை : விருப்பம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
அரசு சார்ந்த பணிகளில் துரிதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும். குடும்பப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
கிருத்திகை : துரிதம் ஏற்படும்.
ரோகிணி : மரியாதை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
மிருகசீரிஷம் : தீர்வுகள் கிடைக்கும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும். விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும்.
பூசம் : அனுபவம் ஏற்படும்.
ஆயில்யம் : விவாதங்களைத் தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
மகம் : புதுமைகள் ஏற்படும்.
பூரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிம்மதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்புத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
சித்திரை : முயற்சிகள் பலிதமாகும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
விசாகம் : குழப்பங்கள் குறையும்.
அனுஷம் : மேன்மை ஏற்படும்.
கேட்டை : மதிப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : தெளிவுகள் உண்டாகும்.
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம்
திருவோணம் : பொறுப்புக்கள் அதிகரிக்கும்
அவிட்டம் : விவாதங்களைத் தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அவிட்டம் : ஆதரவு மேம்படும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள்.
ரேவதி : உதவிகள் சாதகமாகும்.
*┈┉┅━•• ••━┅┉┈*