தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சிக்கிழக்கு இளைஞர்களின் இரத்ததானம்.

தமிழ் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் ” எமது விடுதலைக்காக உயிர்களையே தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக ஒருதுளி குருதி கொடுப்போம் வாரீர்..” என்னும் தொனிப்பொருளில் இன்றையதினம்(25)  இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது
இரத்த தான முகாம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் இன்று காலை 09.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரையிலும் இளைஞர்கள், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
குறித்த நிகழ்வை மாவீரர் ஒருவரினதும் மற்றும் இறுதி யுத்தகாலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட போராளி ஒருவரினதும் தந்தை நினைவேந்தல் சுடரை ஏற்றி ஆரம்பித்து வைத்ததுடன் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews