மாவீரர் நாளில் கஜேந்திரகுமார் எம்.பி பாதுகாப்பு தரப்பு முரண்பட்ட விவகாரம் – பாதுகாப்பு செயலாளர் கருத்து!

உயிரிழந்தவரை நினைவு கூர தடை செய்யப்படவில்லை என்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பினரினரால் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக நான் அறியவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று (28.11.2024) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் தினம் தொடர்பாக முப்படை மற்றும் காவல்துறையினரால் இடையூறுகள் விளைவிக்கபட்டதாக எழுப்ப்பட்ட கேள்விக்கு, யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்த விதமான தடைகளையும் விதிக்கவில்லை இதனை எமது அரசாங்கம் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் சட்டத்திற்குட்படாது சட்டவிரோதமான முறையில் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீதியால் சென்ற பொழுது காவல்துறையினர் தடுத்த விடயம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உயிரிழந்த உறவுகளை உறவினர்கள் அன்பானவர்கள் நினைவேந்தல் செய்வதற்கு எமது அரசு தடை விதிக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews