யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் ஆழியவளையிலிருந்து இயக்கச்சி செல்கினற அபாய வெளியேற்ற பாதை மழைவெள்ளம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில்
பருத்தித்துறை பிரதேச சபையால் நேற்று பிற்பகல் ஈடுபட்டுள்ளது.
இப் பாதையால் நாளாந்தம் வர்த்தக ரீதியிலான பயணத்தில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பணிகளுக்கு செல்வோரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர்
மக்களின் தொடர் கோரிக்கைக்கு அமைய நேற்று பருத்தித்துறை பிரதேச சபையால் வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக புனர்நிர்மானம் செய்யப்பட்டது .