யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 161வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 7 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 8 சிறு மற்றும் மத்தி முயற்சிகள் 7 பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தத்தால் ஒருவர் காயமடைந்துள்ளார்.
77 பாதுகாப்பு முகாம்களில் இரண்டாயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 7271பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 4132 குடும்பங்களைச் சேர்ந்த 13102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. 16 பாதுகாப்பு இடங்களில் 395 குடும்பங்களைச் சேர்ந்த 1414பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 464 குடும்பங்களை சேர்ந்த 1781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 971 குடும்பங்களை சேர்ந்த 3387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் முழுமையாகவும், 72 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 7 அடிப்படை கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. 7 பாதுகாப்பு இடங்களில் 498 குடும்பங்களைச் சேர்ந்த 1817பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 1563 குடும்பங்களைச் சேர்ந்த 4925பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 1422 குடும்பங்களை சேர்ந்த 4562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பாதுகாப்பு இடங்களில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 430 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 2276 குடும்பங்களை சேர்ந்த 7583 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், 11 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன. 6 பாதுகாப்பு இடங்களில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 282 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 217 குடும்பங்களை சேர்ந்த 771 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் சிறு வர்த்தக நிலையம் ஒன்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பாதுகாப்பு இடங்களில் 15 குடும்பங்களை சேர்ந்த 51பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1356 குடும்பங்களை சேர்ந்த 4907 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு உட்கட்டமைப்புகளும் ஒரு சிறு வர்த்தக முயற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. 10 பாதுகாப்பு இடங்களில் 381 குடும்பங்களைச் சேர்ந்த 1341 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1776 குடும்பங்களை சேர்ந்த 5778 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 2 பாதுகாப்பு இடங்களில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 150பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 1872 குடும்பங்களை சேர்ந்த 6665 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 7 பாதுகாப்பு இடங்களில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 511பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 986 குடும்பங்களைச் சேர்ந்த 3474பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகள் பகுதியளவிலும், மூன்று சிறு வணிக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 3 பாதுகாப்பு இடங்களில் 66 குடும்பங்களைச் சேர்ந்த 232பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1150 குடும்பங்களைச் சேர்ந்த 3307 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஒரு சிறு வணிக நிலையமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் இரண்டு பாதுகாப்பு இடங்களில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 59பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவில் 633 குடும்பங்களை சேர்ந்த 2010 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 8 பாதுகாப்பு இடங்களில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 370 குடும்பங்களைச் சேர்ந்த 1233பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 356 குடும்பங்களைச் சேர்ந்த 1136 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 4 பாதுகாப்பு இடங்களில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.