சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி!

  1. சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்  மாவட்டச்  செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (05.12.2024) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய  அரசாங்க அதிபர் அவர்கள், பொருட்களுக்கான பொதியிடல் முறைமையானது ஆரம்ப காலங்களில் முறையாக அமைந்திருக்கவில்லை என்றும், தற்போதும்  சில உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் போது பொருட்களின் பொதியிடல் முறைமையானது மிகச் சிறப்பாக இல்லாமையானது தன்னால் அவதானிக்கப்பட்டதாகவும், சிறப்பான பொதியிடல் இல்லாததால் சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், பொருட்களின்பொதியிடல் மற்றும் தரம் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு மிக முக்கியமானது எனவும், அதனை சிறப்பாக செய்வதனூடாக முன்னேற்றத்தை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும்,  தொழில் முயற்சியாளர்கள்      வங்கிகளில் கடன்களை  பெற்றுக் கொள்வதற்கான  நிபந்தனைகளில் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்து, அதற்கான முறைகள் பற்றியும் பயிற்சி நெறியில் வங்கி முகாமையாளரால் தெளிவுபடுத்தப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை   தொடர்பாகவும், வங்கியில்  கடன் பெற்றுக் கொள்வதற்கான வங்கி  நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.
இப் பயிற்சி நெறியில் வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமைாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) மாவட்ட இணைப்பாளர் மற்றும் தொழில் முயற்சியாளர்கள்  கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews