*_꧁. 🌈 கார்த்திகை: 𝟮𝟳 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟮•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். புதிய நுட்பமான சிந்தனைகள் உருவாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️பரணி : சிந்தித்து செயல்படவும்.
⭐️கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது விவேகம் வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். முதலீடு விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.
⭐️ரோகிணி : விவேகம் வேண்டும்.
⭐️மிருகசீரிஷம் : ஆலோசனை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் எளிதில் கிடைக்கும். நவீன பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புகழ் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சி ஏற்படும்.
⭐️திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : உற்சாகம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படுதல் அவசியமாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️ஆயில்யம் : திருப்தி உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களால் சுப விரயங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இறை சார்ந்த வழிபாட்டில் ஈடுபாடு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️மகம் : விரயங்கள் உண்டாகும்.
⭐️பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆடம்பர பொருட்களால் நெருக்கடிகள் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️அஸ்தம் : குழப்பங்கள் உண்டாகும்.
⭐️சித்திரை : விவேகம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
சவாலான பணிகளையும் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். உறுதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️சுவாதி : தெளிவுகள் உண்டாகும்.
⭐️விசாகம் : வேறுபாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
சிறு மற்றும் குறுந்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசுப் பணிகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️விசாகம் : திருப்தி உண்டாகும்.
⭐️அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : வரவுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் ஆதரவுகள் மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️மூலம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐️பூராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும், சூழலும் அமையும். சுபகாரியங்களில் பொறுமையுடன் இருக்கவும். பக்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.
⭐️உத்திராடம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
⭐️திருவோணம் : லாபம் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
உறவினர்களின் வருகை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
⭐️அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
⭐️சதயம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️பூரட்டாதி : லாபம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். மனதை உருக்கிய கவலைகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.
⭐️பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : குழப்பங்கள் மறையும்.
⭐️ரேவதி : கவலைகள் குறையும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*