புங்குடுதீவு விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

புங்குடுதீவு பிரதேசத்தில் விளையாட்டு துறையில் பங்குபற்றி வருகின்ற அனைத்து விளையாட்டு கழகங்களுக்கும்  சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் பத்து இலட்சம் பெறுமதியான  உதைபந்தாட்ட , வலைப்பந்தாட்ட கரப்பந்தாட்ட ,மென்பந்து துடுப்பாட்ட  உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில்  முன்னைநாள் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் சமூக செயற்பாட்டாளர்களான  பி.சதீஷ், கு.பேபிஷன் ,ஜெ.லக்சிகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புங்குடுதீவு பிரதேசத்தின் வரலாற்றில் ஒரே தடவையில்  அதிகளவு பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews