யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20 வது சுனாமி நினைவேந்தல் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது.
வடமராட்டச்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் தலமையில் இடம் பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவுத் தூவிக்கான மலர்மாலையினை மருத்தங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஈபிடீபி பேச்சாளர் ஐ. சிறிரங்கேஸ்வரன், உட்பட பலர் அணிவித்ததை தொடர்ந்து தேசிய கொடியினை மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்திகாரி ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
பொது ஈகைச்சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் தோமஸ் யூட் ஏற்றியதை தொடர்ந்து சம நேரத்தில் உயிர் நீத்த மக்களிற்க்கான சுடர்கள் ஏற்றப்பட்டன.
இன்றைய நினைவேந்தலில் வணபிதாக்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் உயிரிழந்தவர்களின் உறவுகள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கபந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.