இன்றைய ராசி பலன், குரோதி வருடம் தை 6, ஜனவரி 18/2025, சனிக்கிழமை..!

*_꧁‌. 🌈  தை: 𝟬𝟱 🇮🇳꧂_*

*_🌼 . சனிக்கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟴•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
வருமானத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமையை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் அமையும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
⭐️பரணி : முன்னேற்றமான நாள்.
⭐️கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️கிருத்திகை : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். இடமாற்ற முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️மிருகசீரிஷம் : முயற்சி கைகூடும்.
⭐️திருவாதிரை : அனுகூலமான நாள்.
⭐️புனர்பூசம் : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புகழ் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
⭐️பூசம் : சிக்கல்கள் குறையும்.
⭐️ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்களை அறிவீர்கள். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மகம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️பூரம் : ஆதாயகரமான நாள்.
⭐️உத்திரம் : கட்டுப்பாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையால் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்படும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️உத்திரம் : போட்டிகள் மேம்படும்.
⭐️அஸ்தம் : குழப்பமான நாள்.
⭐️சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️சுவாதி : இழுபறிகள் மறையும்.
⭐️விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
உழைப்புக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். தனம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்..

⭐️விசாகம் : மதிப்புகள் கிடைக்கும்.
⭐️அனுஷம் : ஆதாயகரமான நாள்.
⭐️கேட்டை : மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மூலம் : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️பூராடம் : ஒத்துழைப்பான நாள்.
⭐️உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களால் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணை வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்.

⭐️உத்திராடம் : கவலைகள் நீங்கும்.
⭐️திருவோணம் : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️அவிட்டம் : மாற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் வழியில் உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐️அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
⭐️சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் வருகைகள் ஏற்படும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ கருத்துக்கள் வெளிப்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள்.
⭐️ரேவதி : அனுபவம் வெளிப்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews