
*_꧁. தை: 𝟮𝟰
꧂_*
*_ வியாழன் -கிழமை_
*
*_ 𝟬𝟲•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக்கொள்ளவும். உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மனதில் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். மனதளவில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
ரோகிணி : சிந்தித்துச் செயல்படவும்.
மிருகசீரிஷம் : கனிவு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பிற மொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் கைகூடும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
திருவாதிரை : அபிவிருத்தியான நாள்.
புனர்பூசம் : செயல்பாடுகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் வரவுகள் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.
புனர்பூசம் : நன்மைகள் உண்டாகும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : உதவிகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
பணிகளில் துரிதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
மகம் : துரிதம் உண்டாகும்.
பூரம் : குழப்பங்கள் விலகும்.
உத்திரம் : லாபம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை ஆட்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவுகள் மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். சொத்துப் பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : கத்தரிப்பூ நிறம்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆதரவுகள் மேம்படும்.
சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் உருவாகும். சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : நெருக்கடியான நாள்.
விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவுகள் வழியில் ஆதரவு உண்டாகும். வெளியூரிலிருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : இன்பமான நாள்.
கேட்டை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
மூலம் : பயணங்கள் உண்டாகும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : தன்னம்பிக்கை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
மாற்றமான சிந்தனைகள் மூலம் புதுவிதமான அனுபவங்களும் சூழ்நிலைகளும் உருவாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் அகலும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் குறித்த சிந்தனைகள் மேம்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
உடன் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அரசு உதவிகள் கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணிகளை முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.
அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகப் பணிகளில் முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.
ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.
*┈┉┅━•• ••━┅┉┈*