கொட்டோடை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பும், அறநெறி பாடசாலை ஆரம்பமும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி  கிழக்கு கொட்டோடை. பிள்ளையார் ஆலய  பரிபாலன சபையினரால் தைப்பூசம் நன்னாளான  நேற்றையதினம் கல்விச்  சாதனையாளர்கள் 9 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆலய மண்டபத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் சி.தா.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது.
யா/ அம்பன்  அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான காண்டீபன் எழிலரசி, தவராசா தமிழ்நிலா, தவராசா தமிழ் மதி,
கல்விப் பொதுத் தராதர சாதாரண தேர்வில் திறமை சித்திகளை பெற்று கல்விப் பொதுத்தராதர உயர் தரத்திற்கு தெரிவாகிய  காண்டீபன் குறளரசன்,  சிவகுமார் மதுநிலா,  முருகதாஸ் டிலக்சனா, சுகந்தன் சுபானி, மாகாண மட்ட சித்திரப் போட்டியில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட கணேசவேல் கஜீவனா,  மாகாண மட்ட பண்ணிசை போட்டியில் இரண்டாமிடத்தினைப்  பெற்றுக்கொண்ட நிரோஜன் நிகர்சிகா ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.
இதில் முன்னாள் ஆலய பரிபாலன சபை தலைவர் தங்கராசா பார்த்தீபன்,  கிளிநொச்சி பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலய  ஆசிரியர் தங்கராசா ஐங்கரன்,  வடமராட்சி கிழக்கு பதில் இளைஞர் சேவைகள் அதிகாரி உதயகுமார் நிதர்சன்,  மூத்த பிரஜைகளான தங்கராசா இன்பராசா,  செல்லையா நவரத்தினம்,  கௌரவிக்கப்பட்ட கல்விச் சாதனையாளர்களின் பெற்றோர்கள், கொட்டோடை பிள்ளையார் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கொட்டோடை பிள்ளையார் ஆலய பக்தர்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்..

Recommended For You

About the Author: Editor Elukainews