
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு
ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்றது.




பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில்
மகாபாரதம் “ தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார்.
இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாடு பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





இதேவேளை வவுனியா வடகாடு, பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலைக்கான புதிய கட்டிடம் அமைப்பதற்க்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர் திருமதி சுகுணா முகுந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் அறநெறிப் பாடசாலைக்கட்டிடத்திற்க்கான அடிக்கலினை நாட்டி வைத்தார்.
இதில் வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தை உத்தியோகத்தர் சுஜேந்திரன், பிரமணாலங்குளம் 270d கிராம அலுவலர் கு.தவராசா பெரிய தம்பனை 207 a கிராம அலுவலர் செல்வி நி.ஷோபனா, வடகாடு சனசமூகநிலைய தலைவர் க.சின்னையா, ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகிகள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.