
400 கிலோவிற்கு அதிக எடையில் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வாகனம் ஒன்றில் சூட்சுமமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.





இந்த நிலையில் கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து வீதி சோதனையில் ஈடுபட்டனர்.
உமையாள்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதி சோதனையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், வாகனமும் அதனை செலுத்திய சாரதி உள்ளிட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 400 கிலோவிற்கு அதிக எடை கொண்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 6 கோடி என மதிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.