
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கரவெட்டியின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவை முன்னிட்டு பேடகம் மலர் 2 வெளியீட்டிவிழாவும் , வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன் தலமையில் நேற்று 23/02/2025 பிற்பகல் 3:00 மணியளவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.












இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.
மங்கல சுடர்களை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்கிணராசா, பிரதேச சபை செயலாளர் உட்பட சிறப்பு கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்ட பலரும் ஏற்றிவைத்தனர்.
அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அரங்க திறப்புரை ஓய்வு பெற்ற அதிபர் கிருஸ்ணபிள்ளை நடராசா நிகழ்த்தினார்.
தலமை உரையினை நிகழ்வின் தலைவரான வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து மலர் வெளியீட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் காலசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி லலீசன் நிகழ்த்தினார். தொடர்ந்து மலர் வெளியீடு இடம் பெற்றது. பேடகம் 2 மலரினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா வெளியீட்டுவைக்க முதல் பிரதியினை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி அழைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து சிறப்புரைகளை நிகழ்வின் சிறப்பு விருந்தினரான வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா ஆகியோர் நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து பேடகம் 2 நூல் வெளியிட்டுக் குழுவினர்களான பேராசிரியர் ரகுரம், விரிவுரையாளர்களாநண அஜந்தகுமார், வேல்நந்தன் உட்பட்ட பலரும் கௌரவிக்கப்பட்டதுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கீதம் இயற்றியவர், பாடியவர் இசை அமைத்தோர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் அவர்களது துணைவியார் திருமதி சிறி சற்குணராசா அவர்கள் பரிசில்கள் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.