
மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் இன்று காலை 10.30 மணியளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,



யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், கஸ்தூரியார் வீதியில் சென்ற பேருந்தை வழிமறித்த குறித்த நபர் அதில் ஏற முற்பட்டார். அவர் மது போதையை பாவித்திருந்ததால் பேருந்தில் ஏற முடியாமல் கீழே விழுந்தார். அவரை விட்டுவிட்டு பேருந்து செல்ல முற்பட்ட போதும் குறித்த நபர் பேருந்தின் சக்கரத்துக்கு முன்பாக காலை வைத்து ஆபத்தான விதத்தில் செயற்பட்டு பேருந்தை செல்லவிடாது தடுத்தார்.
பின்னர் பேருந்தில் இருந்தவர் கீழே இறங்கி அவரை தூக்கி வீதியின் ஓரமாக விட்டுவிட்டவேளை பேருந்து பயணத்தை தொடர்ந்தது.