போராட்டத்தில் குதித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழ ஊழியர் சங்கம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று பல்கலைக்கழக நுழைவாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பள உயர்வு, ஆட்சேர்ப்பு, மேலதிக நேரக் கொடுப்பனவு, வரவு செலவுத் திட்டத்தில் தமது சம்பள முரண்பாட்டிற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவேளை நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் கல்வி சாரா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தின் போது கல்வி சாரா ஊழியர்களின் சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையில் வாழ்க்கைச் செலவுக்கேற்ப கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்கின்ற பதாதைகள் ஏந்தி இருந்ததோடு குறித்த போராட்டத்திற்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்  எனவும் தெரிவித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews