
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
வெண்மதி விளையாட்டுக் கழகத்தால் கழக உறுப்பினர்களுக்கான 2025.03.07 திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மைதானத்தில் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தொடர்ந்து மறுதினம் 2025.03.08 திகதி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் கழக வீரர்கள், உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கான தனி/குழு விளையாட்டுக்கள் நடைபெற உள்ளது.
தொடர்ந்து அன்றைய தினம் இரவு வெண்மதி மைதானத்தில் கழக உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகளும் பரிசில் வழங்கும் நிகழ்வும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே கழக உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு வெண்மதி விளையாட்டுக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.