
*_꧁. 🌈 மாசி: 𝟮𝟱 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟵•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பக்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
⭐️பரணி : துரிதம் ஏற்படும்.
⭐️கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
வியாபாரப் பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் மூத்தவர்கள் உடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
⭐️ரோகிணி : முன்னேற்றமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பயணங்களில் நிதானம் அவசியம். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான எண்ணங்கள் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
⭐️புனர்பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
உறவினர்களின் சந்திப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய தெளிவை ஏற்படுத்தும். தெய்வீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். பகை விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️புனர்பூசம் : நெருக்கடிகள் ஏற்படும்.
⭐️பூசம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். வீட்டு தேவைகள் நிறைவேறும். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பரிவு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மகம் : நன்மைகள் உண்டாகும்.
⭐️பூரம் : மேன்மை ஏற்படும்.
⭐️உத்திரம் : தீர்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் மேன்மையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் பொருளாதாரம் மேம்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
⭐️உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அஸ்தம் : மாற்றமான நாள்.
⭐️சித்திரை : பொருளாதாரம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்களில் ஆலோசித்து முடிவு எடுக்கவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
உறவினர்கள் வழியில் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐சித்திரை : பணிகள் நிறைவேறும்.
⭐சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
⭐விசாகம் : ஆதாயம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் உண்டாகும். பணி நிமித்தமான பொறுப்புகளும் அலைச்சலும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆதரவாக இருந்தவர்கள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐விசாகம் : குழப்பங்கள் உண்டாகும்.
⭐அனுஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
உடல் ஆரோக்கியம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தள்ளிப் போன சில காரியங்கள் மீண்டும் நடைபெறும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சக ஊழியர்களின் ஆதரவுகள் மேம்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐உத்திராடம் : அறிமுகங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
வியாபார விஷயங்களில் இருந்துவந்த தேக்க நிலைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தடைகள் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
⭐️உத்திராடம் : தேக்கநிலைகள் குறையும்.
⭐️திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தடைகள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் புதிய வாய்ப்புகள் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️அவிட்டம் : தடைகள் மறையும்.
⭐️சதயம் : மாற்றமான நாள்.
⭐️பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். பயணம் மூலம் சில மாற்றமான சூழல் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : உபாதைகள் நீங்கும்.
⭐️உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ரேவதி : மாற்றமான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*