
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி இன்று (12) கட்டைக்காட்டில் இடம்பெற்றது







வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் முற்பகல் 09.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வைகுந்தன் விமலராணி தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.
குறித்த கண்காட்சியில் பயிலுனர்களின் ஆக்கத்திறன்களான தையல்வேலை,கைவேலை,பின்னல்வேலை, பெயின்ரிங்வேலை,மலர் ஒழுங்கமைப்பு,கேக் ஐசிங்,சாரி வேலை உட்பட பல்வேறு ஆக்கத்திறன்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன
பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திரு கு.பிரபாகர மூர்த்தி,
சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட செயலக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுனேத்திரா சுதாகர் மற்றும் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சிவகுமார் சுமதி
கெளரவ விருந்தினராக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மகளிர் அபிவிருத்தி போதனா ஆசீரியர் தலைமைப்பீடம் செல்வி பவானி ஆழ்வாப்பிள்ளை,
ஏனைய விருந்தினர்களாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அ.அமல்ராஜ், கிராம அலுவலர்,ஆசிரியர்கள்,முள்ளியான் பிரிவுகளின் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.