கட்சிகளை நம்பாது தமிழ் மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும்- சுயேட்சை குழு தலைவர் முல்லைதிவ்யன்

சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உருவாக்க உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தமது சுயேட்சை குழுக்கு வாக்களிக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபை யில்  சுயேட்சை குழுவாக போட்டியிடும் அதன் தலைவர்  முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார்.
நேற்று  (10)வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே  மேற்கண்டவாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுடைய மண்,மக்கள் நலனை பிரதான இலக்காக கொண்டு நாம் வரித்துக் கொண்ட தமிழ் தேசிய பற்றோடு பிரதேச அபிவிருத்தியை பிரதான இலக்காக கொண்டு நாங்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.
சுயேட்சையாக களமிறங்கும் எமது குழுவில் தோட்ட வேலை செய்பவர்கள்,ஏழை மீனவர்கள்,கழிவு அகற்றும் தொழிலாளர்கள் உட்பட பல புத்திஜீவிகள் வேட்பாளராக களம் காணவுள்ளனர்
கட்சிகள் தங்களுடைய சுய இலாபத்திற்காக வேட்பாளர்களை நிறுத்தி அதனூடாக வாக்குகளை அபகரித்து தங்களுக்கான சுய இலாபத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுவதன் ஊடாக எங்களுக்கு கிடைக்கின்ற ஆசனங்களை பயன்படுத்தி சுதந்திரமான தீர்மானங்களை நாமே எடுத்து எங்களுடைய பிரதேசங்களையும்,வட்டாரங்களையும் சிறப்பாக அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்
மக்கள் தூரநோக்கோடு சிந்திக்க வேண்டும்.இன்று கட்சிகள் பலவாறாக சிதறுண்டு போயுள்ளன.ஆகவே இந்த கட்சிகளின் அரசியலுக்கு அப்பால் நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான பிரதானமான காரணம் கட்சிகளின் மேல் கொண்ட அதிருப்தியும்,மக்கள் மீதும் கொண்ட பற்றும்தான் நாங்கள் இன்று சுயேட்சை குழுவாக போட்டியிடுகின்றோம்
ஆகவே எமது சுயேட்சை குழுவை நீங்கள் ஆதரித்து எமது மக்களுக்கான தேவைப்பாடை ,அடிப்படை வசதிகளை பிரதேச அபிவிருத்தியை செய்வதற்கு எமது சுயேட்சை குழுவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்
கட்சிகளின் ஏமாற்று வேலையை நம்பாது எமக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் நிச்சயமாக,திடமாக,உறுதிப்பாடான,புதிய மறுமலர்ச்சி நோக்கிய சுபீட்சமான ஒரு பிரதேசத்தை எங்களால் நிச்சயமாக ஏற்படுத்த முடியுமென தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews