
குப்பிழான் விவசாயிகள் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 14.03.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விவசாயிகள் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
உடுவில் கமநல சேவை உத்தியோகத்தர் தலைமையில் நடைபெறும் மேற்படி கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் 2025 ஆம் ஆண்டுக்கான விவசாய அங்கத்தவர் பதிவும் இடம்பெறும்.
ஒவ்வொருவருக்கும் அங்கத்துவப் படிவம் வழங்கப்பட்டு அவ்விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்து தரும் ஒழுங்கில் அவர்களுக்கான அங்கத்துவ இலக்கம் வழங்கப்படும். ஒவ்வொரு அங்கத்தவரும் 250 ரூபாய் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளவும்.
குறித்த கூட்டத்தில் சம்மேளனப் பதிவில் உள்ள சகல விவசாயிகளும் கலந்து கொண்டு மேற்படி தங்களின் விவசாயப் பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு குப்பிழான் விவசாய சம்மேளனத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.