
ஊழல் ஒழிப்பு அணி வன்னி” – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எமது தோழர்கள் எவரும் இந்த பக்கத்தை இயக்கவில்லை.
எனினும், தாங்கள் தேசிய மக்கள் சக்தியினர் என காண்பித்துக்கொண்டு அரசியல் மோசடியில் ஈடுபடுவதற்கு மேற்படி முகநூல் பக்கம் ஊடாக முயற்சி எடுக்கப்படுவதை அறியமுடிகின்றது.
இந்த சைபர் குற்றத்துக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும். அதேபோல இப்பக்கத்தக்கு எதிராக முகநூல் நிறுவனத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பக்கத்தக்கு எதிராக நீங்களும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.
ஊழல், மோசடிகள், அநீதிகள் இடம்பெறுமாயின் அதனை துணிவுடனும், நேர்மையுடனும் சுட்டிக்காட்டும் தைரியம் எமது தேசிய மக்கள் சக்தியினருக்கு உள்ளது. எனவே, போலி முகநூல் ஊடாக உலாவ வேண்டிய எவ்வித தேவைப்பாடும் எமக்கு கிடையாது.
போலிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனினும், ஏதேனும் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை பதிவு என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
