அமைச்சர் விஜித ஹேரத்துடன் பொன் சுதன் சந்திப்பு

அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  கிளிநொச்சியிலிருந்து  போட்டியிட்டவரும், இயக்கச்சி இராவணன் வனத்தின் உரிமையாளருமான  பொன் -சுதன் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினார்
கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து இயற்கை வளங்கள், மற்றும் பிரதேச அபிவிருத்தி, இளைஞர்கள் முன்னேற்றம் சம்மந்தமாக கலந்துரையாடினார்.
குறிப்பாக மாவீரர் துயிலுமில்லங்கள் விடுவித்தல், மக்களின் காணிகள் அவர்களுக்கே ஒப்படைத்தல் போன்ற முக்கிய விடயங்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews