சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் ஆன்மீக  அருளுரையும், ரூபா 200,000 உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் நிகழ்வில் இன்றைய தினம் 21.03.2025 மகாபாரதம் தொடர் சொற்பொழிவை சொல்லின் செல்வர் இரா செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து உதவித் திட்டங்களாக யாழ்ப்பாணம் விழிப்புலன்ற்ற சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
பார்வையற்ற இரண்டு குடும்பங்களின் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பை பெற்றுக் கொள்வதற்க்காக  ரூபா 130,000  நிதி யாழ் விழிப்புலன்ற்ற சங்கத்தை சேர்ந்த திரு  ரவி அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும் குப்பிழானைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு விவசாய தேவைக்காக 70,000 ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தலமையில்  மோகனதாஸ் இடம் பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம  சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நநிதியான் ஆச்சிர தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கபந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews