தையிட்டி விகாரை தொடர்பில் பெளத்த சாசன அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய காணிக்கான மக்கள் உரிமை இயக்கம்..!

காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கம் பெளத்த சாசன அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை  சந்தித்தனர். நேற்று (20) மாலை 2.00 மணிக்கு பத்தரமுல்லையில்  அமைந்துள்ள பௌத்த சாசன  அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் பிமல் ரத்னாயக்கா அவர்களை சந்தித்து  தையிட்டி மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
தையிட்டி திஸ்ச விகாரை அமைந்துள்ள மக்களின் காணிக்கான உரிமை பத்திரங்கள் காண்பிக்கப்பட்டதுடன் இது அவர்களுடைய பூர்விக வாழ்விடம் என்பதனையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காணி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் குறித்த காணியை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பை சேர்ந்த பிரியங்கரகொஸ்தா, நட்டாஷா, காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண தலைவர் இ.முரளிதரன், யாழ்மாவட்ட உறுப்பினரும்,தையிட்டி காணி உரிமையாளருமான சாருஜன் உட்பட 6காணி உரிமையாளர்கள், யாழ்பல்கலைகழக பேராசிரியர் திருவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews