முல்லைத்தீவு மாவட்டத்தில், 8 மில்லியன் ரூபா செலவில், அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ், நீர் பாயும் பகுதி அனர்த்த்தை தடுக்கும் நோக்கில், இன்று, புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்காக, 2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில், சர்வோதய நிறுவனத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நீர்பாசன திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனிக்குளத்தின் கீழ், வெள்ள அனர்த்தத்தில் இருந்து, விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில், இந்த புனரமைப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முதன்மை விருந்தினராக பங்கேற்று, திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.