நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காராணமாக ஒரே தடவையில் அதிகமான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரிசி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான மெட்ரிக் தொன் அரிசியை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் எனவும் அந்தச் சங்கம் கூறியுள்ளது.
டொலர் பிரச்சினையும் அரிசி இறக்குமதிக்குத் தடையாக உள்ளது எனவும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.