சிறந்த நோக்கத்திற்கான ஒரு நாடு – ஒரே சட்டம் செயலணிக்கு ஞானசார தேரர் தகுதியற்றவர் என்றும், ஞானசார தேரரும், அருட்தந்தை சிறில்காமினியும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள் என்றும், இருவரும் அடிப்படைவாதிகள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்
டிலான் பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஐக்கிய தேசிய கட்சி நிதிமோசடியில் ஈடுப்பட்டாலும், எமது அரசாங்கம் நிதி மோசடியில் ஈடுப்பட்டாலும் தவறு என குறிப்பிடுவேன்.
ஏனெனில் என்னை திருடன் என எவரும் குறிப்பிட முடியாது. அரச நிதி மோசடியாளர்களுக்கு கட்சி பேதமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
இனவாதத்தையும், மதவாதத்தையும் அடிப்படையாகக்கொண்டு அரசியலில் செயற்படவில்லை. பௌத்த மதம் அறத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை தலைவராக நியமித்துள்ளமை பொருத்தமற்ற செயற்பாடாகும். சிறந்த கொள்கைக்கான ஜனாதிபதி செயலணிக்கு அவர் தகுதியற்றவர்.
மறுபுறம் அருட்தந்தை சிறில்காமினியும் ஒருவகையில் அடிப்படைவாதி முஸ்லிம் பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் பொய்யுரைத்துள்ளார்.
அந்த அதிகாரி முஸ்லிம் என்ற காரணத்தினால் இவ்விடயம் தொடர்பில் குற்றபுலனாய்வு பிரிவிற்கு சாட்சியமளிக்கவும் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.