எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தமது கடன் தவணைகளை சரியான முறையில் செலுத்த முடியாத நிலை உருவாகும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய ட்விட்டர் பதிவொன்றினை இட்டு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தற்போது டொலர் இல்லை என்று புலம்புவதை விடுத்து, கூட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்த வெண்டியது அவசியமாகிறது ஆகவே, அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டிய காலம் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.