இலவச சித்தஆயுர்வேத மருத்துவமுகாம் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ் இந்திய துணைத் துரகமும் மற்றும் வடமாகான சுதேச மருத்துவ திணைக்களம் இணைந்து சித்தமருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த இலவச மருத்துவ முகாம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள பாரதிவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராஜேஸ் நட்ராஜ், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதிகேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த இலவச மருத்துவ முகாமில் மக்கள் பலரும் கலந்து கொண்டு மருத்துவ சேவையினை பெற்றுக்கொண்டனர்.