யாழ்.அரியாலை கிழக்கு – மணியந்தோட்டம் பகுதியில் நபர் ஒருவருடைய வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணம் வந்ததாக அண்மையில் சர்ச்சைகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த நபருடைய வீட்டுக்கு சென்று விசாரித்த பொல்ஹாவல பகுதியை சேர்ந்த 3 பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் யாழ்.அரியாலையை சேர்ந்த நபர் ஒருவருடைய வங்கி கணக்கிற்கு பல கோடி ரூபாய் பணம் வந்ததாக சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றய தினம் மணியந்தோட்டம் பகுதியில் உள்ள அந்த நபருடைய வீட்டுக்கு
3 பேர் சென்று விசாரித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார்,
அங்கிருந்த 3 பேரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் நிறுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.