கொங்ஹொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற நினைவுத்தூபி அகற்றப்பட்டுள்ளது.
8 மீட்டர் உயரம் கொண்ட குறித்த செம்பு நினைவுத்தூபி இரவோடு இரவாக கட்டுமாணத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
1989 ஆம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள், சீனப் படையினரால் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் இந்த நினைவுத்தூபி ‘வெட்கக்கேட்டின் சின்னம்’ என்று அழைக்கப்பட்டது.
உலகிலுள்ள அதிகாரமிக்க நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணு உடன்படிக்கை பேச்சுக்கள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்ரியா தலைநகர் வியட்னாவில் நடைபெறும் இந்த எட்டாம் சுற்றுப் பேச்சுக்களில் முன்னோக்கி செல்வது குறித்து கலந்துரையாடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி என்ரிக் மோரா குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக நிலுவையில் உள்ள விடயங்களை வேகப்படுத்துவது மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவது முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.