ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரம் எமது உறவுகளின் 17 வது நினைவு நாள் இன்றாகும்,
கடந்த 26/12/2004 அன்று பல்லாயிரம் எமது உறவுகளை காவுகொண்ட ஆழிப்பேரலை பேரனர்த்தம் நிகழந்து இன்று 17 ஆண்டுகள் இன்று கடந்திருந்தாலும் அதன் விளைவுகள் இன்றும் எம்மீது தாக்கம் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த அதிர்ந்து போன சில நிமிடங்களில் எழுந்த அலை காவுகொண்ட போது எம்மகள் பல்லாயிரம் பேர் இறந்தனர்.பல்லாயிரம் கோடி சொத்துக்கள் அழிந்தன, அனைத்துமே மாறிப்போயின.
இன்று யாழ்பாணத்தில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்திலும், மணல்காடு சுனாமி நினைவாலயத்திலும், மட்டுமல்ல பல இடங்களில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபிகளிலும் நினைவேந்தல் இடம் பெறவுள்ளன.