சுவிஸ் நாட்டில் வசித்துவரும் பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேய பணியாளர் ஒருவர்
அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கத்தினுடாக கடந்த 24/12/2021 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் புஸ்பசேகரம் என்பவர் துவிச்சக்கரவண்டியில் வயல்வேலை முடித்து வரும்போது பாலத்துக்குள் விழுந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு சுமார் ஒரு வருட காலமாக கழுத்துக்கு கீழ் பகுதிகள் எந்த செயற்பாடும் இல்லாமல் அங்கவீனராக இருக்கும் இவருக்கு நான்கு சிறுவயதுடைய பிள்ளைகள் உள்ளனர்.
இவரது மனைவி கணவரையும் பராமரித்து பிள்ளைகளையும் பராமரித்து கூலி வேலை செய்தே அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்றாமல் முடியாமல் மிகுந்த கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார். இவ் குடும்பத்தின் நிலை அறிந்து வாழ்வாதார உதவியாக பசுமாடும் கன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் குடும்பத்திற்கு முதல் தடவையும் அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தினூடாக மாடும் கன்றும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் மனிதநேயப்பணியில் அகரம் ஒருங்கிணைப்பாளர் பானு மற்றும் அகரம் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் கனீஸ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கிவைத்தார்கள்.
அன்புக்கரம் கொடுத்த சுவிஸ்நாட்டில் வாழும் பெயர்குறிப்பிட விரும்பாத மனிதநேயப் பணியாளரையும் அவரது குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் நோய்நோடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என உதவியை பெற்றுக்கொண்ட குடும்பமும் அகரம் குடும்பத்தினரும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.