(திருமலை மாவட்ட நிருபர்)
திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களில் 21 ஆவது அணியினரின் ஏற்பாட்டில் இணைந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திருமதி புனிதா செல்வம் அவர்களின் நிதியனுசரனையில் பாட்டாளிபுரம் கிராமத்தில் இருந்து பள்ளிக்குடியிருப்பு மற்றும் சேனையூர் போன்ற இடங்களுக்கு கல்வியைத் தொடரச் சென்று வருகின்ற ஐந்து மாணவர்களுக்கு நேற்றைய தினம் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வழங்கப்பட்டன.
நத்தார் பண்டிகையினை முன்னிட்டு வழங்கப்பட்ட இச் சிறப்பான பணிக்காக குறித்த பழைய மாணவர்களுக்கு பிரதேச மக்களும் உள்ளூர் அமைப்புகளும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளன.