கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வகை வரைஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று நாட்களில் 4,300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு தொடர்பிலுள்ள அச்சத்தினால் விமான ஊழியர்கள் பலர் விடுமுறையில் சென்றதும், மக்கள் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்த்து கொண்டதுமே இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் வகை வைரஸானது டெல்டா வைரஸினை விட மூன்று மடங்கு வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதுவுமின்றி மிக வேகமாக பரவும் இந்த ஒமிக்ரோன் திரிபினை கண்டு உலக நாடுகள் அச்சமடைந்துள்ளது.
இந்நிலையில் நத்தார் பண்டிகையினையொட்டி கடந்த 3 நாட்களில் 4,300க்கும் மேற்ப்பட்ட விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.