ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது 17 வது நினைவேந்தல் இன்று உடுத்துறை சுனாமி நினைவகத்தில் இடம் பெற்றது.
வடமராட்சி கிழக்கில் காவு கொள்ளப்பட்ட 1002 பேரில் 700 க்கு மேற்பட்டவர்களது கல்லறைகள் உள்ள குறித்த நினைவாலயத்திலேயே இன்று நினைவேந்தல் இடம் பெற்றது.
இதில் பொது ஈகை சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, உலக தமிழ் தேசிய பேரவை செயற்பாட்டாளர் திருமதி ஜெகதீஸ்வரி சற்குணதேவி உட்பட பலரும் ஏற்றியதை தொடர்ந்து பலரும் ஏற்றினர்.
அதன தொடர்ந்து பொதுச் சுடரினை சுனாமி நினைவாலயத்திற்க்கு காணி வழங்கிய திருமதி புத்திரசிகாமணி ஏற்றினார் அதனை தொடர்ந்து அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது உறவுகளும் ஏற்றினர்.
இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதற்க்கான முழுமையான அனுசரணையை உலக தமிழர் தேசிய பேரவை வழங்கியமை குறிப்பிட தக்கது