வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில் இலங்கையின் தென் மேல் , மலையகம், கிழக்கு , வன்னி, யாழ் என அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் சைவ அமைப்புக்களின் தலைவர்கள் , பிரதிநிதிகள் கடந்த ஞாயிறு 26.12. 2021|பங்கேற்றனர். இக் கூட்டத்திலேயே சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ் இயங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சைவப் பேரவை தலைவர் மேனாள் நீதிபதி சி. வசந்த சேனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
மலையக இலங்கை சித்தர் பீட நிறுவுநர் தவத்திரு . நரசிங்க நவநீத சுவாமிகள்,
சைவ பரிபாலன சபை தலைவர்
சிவத்திரு. வி. ஶ்ரீசக்திவேல்
சைவ வித்யா விருத்திச் சங்க தலைவர்
கவிஞர் சோ பத்மநாதன்
சைவ மகா சபை தலைவர்
சிவத்திரு நா. சண்முகரட்ணம்
வவுனியா அகிலாண்டேசுவரர் ஆலயம் மற்றும் அருளக சிறுவர் இல்லம், சிவன் முதியோர் இல்ல தலைவர் சிவத்திரு ஆ. நவரெத்தினராசா
அம்பாறை சைவநெறிக் கூடத் தலைவர்
சிவத்திரு க .கணேசன்
யாழ் இந்து கற்கைகள் பீட சமசுகிருத துறைத் தலைவர்
சிவசிறி. ம. பால கைலாச நாத சர்மா
கிளிநொச்சி திருநெறிக் கழக தலைவர்
சிவத்திரு.அ. சிவஞானசுந்தரம்,
மன்னார் சிவபூமி சிவதொண்டர் அமைப்பு தலைவர் சிவத்திரு ம. நடேசானந்தன், தமிழ்ச் சைவப் பேரவையின் பிரதித் தலைவர்
மேனாள் அரசாங்க அதிபர்
சிவத்திரு. நா. வேதநாயகன்,
சிவாச்சாரியர்கள், நுவரெலியா, மட்டக்களப்பு திருகோணமலை, வன்னி , மன்னார், கொழும்பு, யாழ் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். யாப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
குரு பீடமாக சைவ சித்தாந்த ஆதீனங்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
சைவ அமைப்புக்கள் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சைவத் தமிழ் மறுமலர்ச்சியை தொலைநோக்கமாகக் கொண்டு பின்வரும் குறிக்கோள்களில் செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டது
1. சைவத் திருக்கோவில் களின் ஆலயம் சமூக மையம் எனும் எண்ணக்கருவை உறுதிப்படுத்தவும் பிணக்குகளை சுமூகமாக தீர்க்கவும் பொது ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்கவும் சகல தளங்களிலும் உழைத்தல்
2. சைவ அமைப்புக்கள் தங்கள் சுயாதீனத்தை பேணியவாறே பொது வேலைத் திட்டத்தை பிரதேச / பிராந்திய / அகில இலங்கை ரீதியில் முன்னெடுக்கும் வகையில்
ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல்
3. தமிழ் சைவர்களின் ஆன்மீக, வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு உழைத்தல்
4. தமிழ் சைவத்துடன் தொடர்புபட்ட கலைகளான பரதம், பண்ணிசை, கூத்து, யோகாசனம், சித்த மருத்துவம், இயற்கை விவசாயம் என்பவற்றின் வளர்ச்சியில் பங்காற்றல்
5. தமிழ்ச் சைவர்களின் பக்தி கருவூலங்களான பன்னிரு திருமுறைகள், பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள் என்பவற்றை பக்தி இயக்கமாக சமூகத்தின் சகல தளங்களிற்கும் எடுத்து செல்லல்
6. சைவச் சிறார்களின் அறநெறி மேம்பாட்டுக்கு உதவுதலும் இலங்கை பூராகவும் உள்ள சைவச் சிறார் இல்லங்களின் வளர்ச்சியில் பங்களித்தலும்
7. நலிவுற்ற விசேட தேவைப்பாடுடைய மக்களின் வாழ்வியல், மருத்துவ கல்வி போசாக்கு நடவடிக்கைகளில் உதவும் வகையில் சைவ அறப்பணி நிதியத்தை உருவாக்கலும் ஏற்கனவே அமைப்புக்கள் ஆலயங்களினால் முன்னெடுக்கப்படுவற்றை வலுப்படுத்தலும்.
8. தமிழ் சைவர்களின் பூர்வீக தொல்லியல் மரபுரிமைகளை உறுதி செய்தலும் பாதுகாத்தலும்
9. தமிழ் சைவர்களின் தார்மீக உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் உறுதி செய்யவும் உழைத்தல்
10. சைவத்தமிழ் மறுமலர்ச்சிக்கு தேவையான சகல வேலைத்திட்டங்களையும் ஒன்றிணைந்த கட்டமைப்பாக முன்னெடுத்தல்.
ஆராய்வுகள் பிரதி வெள்ளி தோறும் இரவு 9 – 9.40 வரை நடைபெறும் நிகழ்நிலை கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டு முன்னுரிமை விடயதான பிராந்திய பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.