மருதங்கேணியில் இடம் பெற்ற தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாம்……!

வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பின் பெயரில் வடமராட்சி கிழக்கு கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மருத்துவர்களின் அனுசரணையில் ஆலயங்களின்  அர்ச்சகர்கள்  மற்றும் அங்கு பணியாற்றும் தொடர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை முகாம் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு
கலாச்சார நிலையத்தில் இடம்பெற்றது.
 கலாச்சார உத்தியோகத்தர் செல்வி சே. செல்வ சுகுணா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
 மங்கள விளக்குகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரன் மூர்த்தி, உதவி பிரதேச செயலாளர் பசுபதி தயானந்தன், கலாசார உத்தியோகத்தர் சே. செல்வ சுகுணா, இந்த கலாச்சார உத்தியோகத்தர் மாலதி ராகுலன், மருதங்கேணி உதவி சுகாதார வைத்திய அதிகாரி priyanakuda rathnayaka, மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பாலசுந்தரம் பாலதேவா, உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடரந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, தலமை உரை நிகழ்த்தியதுடன்  மருத்துவ முகாமை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, உதவி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன், கலாசார உத்தியோகத்தர் சே.செல்வசுகுணா, இந்து கலாசார உத்தியோகத்தர், மாலதி ராகுலன், மருதங்கேணி உதவி சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி, மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பாலேந்திரம் பாலதேவா, பொது சுகாதார பரிசோதகர்களான யோ.வசீகரன்.பா.கிசோகுமார்
குடும்ப நல உத்தியோகத்தர்கள், தாதியர்கள், ஆலயங்களின் பிரதம குருக்கள்கள், ஆலய தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் ஆலயத்தின் அர்ச்சகர்கள், தொண்டர்களுக்கான தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் இடம்நபெற்றமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews