தனது வீட்டிலிருந்து தொடர்ச்சியாக நகைகளை திருடி விற்பனை செய்துவந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 27 லட்சம் ரூபாய் பணத்தையும், அவருக்கு உதவிய மற்றொருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தெல்தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
வீடொன்றில் தங்க ஆபரணங்கள் காணாமல்போனதாக சம்பந்தபட்ட குடியிருப்பாளர்கள் கடந்த 27ஆம் திகதி கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்திருந்தனர்.
நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குற்றத்தடுப்பு பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் குடும்ப உறுப்பினர் ஒருவரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த நபர் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி தெல்தோட்டை நகரில் இருக்கும் பிரபல நகை வியாபார நிலையங்களுக்கு கொண்டுசென்று விற்பனை செய்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு மேல் வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுசென்று விற்பனை செய்துவந்துள்ளார்.
மேலும் தங்கத்தை விற்பனைசெய்த நபரிடமிருந்து சுமார் 27 இலட்சம் பணத்தை கலஹா பொலிஸார் மீட்டுள்ளனர்.
திருடியவரிடமிருந்து நகைகளை கொள்வனவுசெய்த தெல்தோட்டை நகரின் நகைக்கடை உரிமையாளர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.