இலங்கை முதலுதவி சங்கத்தின் 46 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 2021 ஆம் ஆண்டுக்கான வாழும்போதே வாழ்த்துதல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோண்டாவில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது.
இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை மோகனதாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்வில் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் திரு முன்னிலை வகித்தார்.
இதில் பிரதம அதித்தியாக வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ், சிறப்பு அதிதிகளாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன், யாழ் மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாழிகிதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசி உரையை சிவகுரு ஆதீன குருமுதல்வர் வணக்கத்திறக்குரிய வேலன் சுவாமி வழங்கியதை தொடர்ந்து தலமை உரையை இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் வழங்கினார்.கருத்துரையை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் நிகழ்த்தினார்.
இதில் தேசகீர்த்தி, சமூக ஜோதி, மக்கள் திலகம் , ஆகிய விருதுகள் 60 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறப்பாக செயலாற்றிய 40 இலங்கை முதலுதவி சங்க தொண்டர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.