நாட்டில் வருடாந்தம் சிகரெட் விலையை அதிகரிப்பதற்கான வரி சூத்தரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.
மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகாரசபை இந்த வரி சூத்தரத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.
மேலும் இந்த சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதாரத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் சிகரெட்டின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக
உரிய முறைமைக்கு சிகரெட்டின் விலையை அதிகரிப்பதே இந்த வரி சூத்திரத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நாட்டில் 24 வயதிற்கு குறைந்தவர்களுக்கு சிகரெட் மற்றும் மதுசாரம் போன்றவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.